இந்த வருடம் சிறந்த படம் பிரிவில் ஒன்பது படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் போட்டிப் போடுகின்றன. இதில் பல படங்கள் ஏற்கனவே கௌரவமிக்க பாப்டா விருதுக்கு தேர்வாகியுள்ளன. இந்த ஒன்பது படங்களில் எது ஆஸ்கரை கைப்பற்றும் என்பது இம்மாதம் 26ஆம் தேதி தெரிய வரும். அதற்கு முன் இந்த ஒன்பதுப் படங்களையும் பார்க்க பிரியப்படுகிறீர்களா?
ஆம், என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இலவசமாக சென்னையில் இந்த ஒன்பது படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்காக ஒழுங்கு செய்திருக்கிறது, தமிழ்ஸ்டுடியோ இணையதளம்.
குறும்படம், இலக்கியம், நிகழ்த்துக்கலை என பல்வேறு கலை வடிவங்களுக்கு குளுக்கோஸ் அளித்துவரும் இணையதளம்தான் தமிழ்ஸ்டுடியோ. இவர்கள் வரும் சனி மற்றும் ஞாயிறுகளில் - 18, 19 தேதிகளில் - இந்த ஒன்பது திரைப்படங்களையும் திரையிடுகிறார்கள். ஒருநாள் ஐந்து படங்கள், இன்னொரு நாள் நான்கு படங்கள். காலை பத்து மணிக்கு திரையிடல் ஆரம்பமாகும்.
சென்னை கேகே நகர் பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸின் அருகிலுள்ள தியேட்டர் லேப் அரங்கில் இந்த திரையிடல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு படங்களை ரசிக்கலாம். அனுமதி இலவசம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.