ஜெயா தொலைக்காட்சி நடத்திய என்றென்றும் ராஜா என்ற இளையராஜாவின் இசை கச்சேரிக்கு திரையுலகின் ஜாம்பவான்கள் யாரும் வரவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்தது தோனி இசை வெளியீட்டு விழா.
அரங்கம் நிரம்ப விஐபி-கள்தான். இயக்குனர்கள் மகேந்திரன், பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாமோகன், பார்த்திபன்... இன்னும் ஏகப்பட்ட பேர். ஒவ்வொருவரும் இளையராஜாவுடனான தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டது கதம்ப மாலையாக மணத்தது.
தோனியை பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்துள்ளார். குழந்தைகளின் உலகைப் பற்றிய படம் என்பதால் தனது திரை வாழ்க்கையில் முதல் முறையாக படத்தின் பாடல்களை லைவ்வாக மேடையில் இளையராஜா பாட வைத்தது புது அனுபவம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.