போராட்டம் ஒருபக்கம் நடக்கட்டும், நாம் ஒருபக்கம் படப்பிடிப்பை நடத்துவோம். பிரச்சனைன்னு வந்தால் அபராதம் கட்டலாம். இந்த மனநிலையில் பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் படங்கள் சில நாள் படப்பிடிப்பை நடத்தினர். போராட்டம் தொடரவே மீண்டும் கிளாப் கட்டைகளுடன் தயாராகி வருகின்றனர், படப்பிடிப்புக்கு கிளம்ப.
பெப்சி இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தும் அமைப்பு என்பதால் ஹைதராபாத்தில் மட்டுமின்றி மும்பையிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை நடத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் பெப்சி உறுதியாக உள்ளது. முக்கியமாக அஜீத்தின் பில்லா 2, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான். இந்த மூன்றுப் படங்களின் படப்பிடிப்பை நடத்ததான் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.
நாளை முதல் விஜய்யின் துப்பாக்கி படப்பிடிப்பை மும்பையில் நடத்த முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியதையடுத்து பெப்சி அமைப்பு பரபரப்பாகியிருக்கிறது. துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடக்காமலிருக்க எல்லா வழிமுறைகளும் பிரயோகிக்கப்படும். நாளை ஒரு சண்டைக் காட்சியை நாம் எதிர்பார்க்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.