சாதாரண வெத்தழகியாக இருந்த அமலா பாலை தமிழ் சினிமா முத்தழகியாக மாற்ற, அவரோ வளர்த்த கடா நெஞ்சில் பாய்ந்த கதையாக தமிழ் என்றாலே கசப்பு மருந்து குடித்த குரங்காக முகத்தை இழுத்துக் கொள்கிறார். இந்தக் கசப்பு மருந்துக்கு காரணம் தெலுங்கு வாய்ப்பு.
காதலில் சொதப்புவது எப்படி தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்த வெற்றிக்கு முன்பே ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் அமலா பாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தூரமாக போன அதிர்ஷ்டம் பின்னால் துரத்தி வந்த மாதிரி இன்னொரு வாய்ப்பும் அமலா பாலுக்கு கிடைத்திருக்கிறது.
விவி வினாயக் சிரஞ்சீவியின் மகன் ரம் சரண் தேஜாவை வைத்து இயக்கும் புதுப் படத்தில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்ய விரும்பியிருக்கிறார். காஜல் கடுமையான கால்ஷீட் நெருக்கடியில் இருப்பதால் அதிர்ஷ்டம் அடித்தது அமலா பாலுக்கு.
ஏற்கனவே அமலா பாலுக்கு தலைகொள்ளாத கனம். இனி கரகம் இல்லாமலே கரகாட்டம் ஆடுவார்… ஜாக்கிரதை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.