ஆனாலும் அஞ்சலிக்கு துணிச்சல் ஜாஸ்தி. ஹீரோயினாக நடிக்கும் போதே பிரபல நடிகருக்கு அண்ணியாகியிருக்கிறார்.
என்ன அதிர்ச்சியாகயிருக்கிறதா? முழுக்கதையும் கேட்டால் அவ்வளவு காட்டமாக இருக்காது. தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் மகேஷ்பாபுவும் நடிக்கிறார், அவரின் தம்பியாக. தம்பி மகேஷுக்கு ஜோடி சமந்தா. ரொம்ப எளிதாக கிடைத்துவிட்டார். அண்ணன் வெங்கடேஷுக்கு ஜோடி என்று போனாலே கதவடைக்கிறார்கள் பிரபல நடிகைகள்.
வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிப்பது வெல்லக்கட்டிதான். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் மகேஷ்பாபுக்கு அண்ணியாகிவிடுவார். அனுஷ்கா முதல் த்ரிஷா வரை ஊஹும் என்று ஓட்டம் எடுத்த இந்தக் கேரக்டரில் நடிக்க அஞ்சலி உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மகேஷ்பாபுவுடன் எப்போதும் ஜோடியாக முடியாது. அப்புறம் எதுக்கு அண்ணி கேரக்டருக்கு கவலைப்படணும் என்று நினைத்திருப்பாரோ?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.