மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தாப்ஸி, சோனம் கபூர் சூர்யாவுடன் ?

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் குறித்து கலர் கலரான தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. முக்கியமான விஷயம் சோனம் கபூர்.

சிம்பு பலமுறை முயன்ற நடிகைதான் சோனம் கபூர். இந்தியில் பிஸி என்று கால்ஷீட் கேட்டவர்களுக்கு டாடா காட்டிய அனில் கபூ‌ரின் மகள் முதல் முறையாக தமிழில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுடன் ரவி தேஜாவும் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடி, வெள்ளாவி‌யில் வெளுத்த தாப்ஸி என்கிறது வெங்கட்பிரபு வட்டாரம்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கி‌ரீன் ஞானவேல்ராஜா தயா‌ரிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.