மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒரு கதைக்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்த கௌதம் மேனன்

கௌதமின் முதல் இந்திப் படம் ப்ளாப். இரண்டாவது ஏக் திவானா தா வரும் 17ஆம் தேதி வெளியாகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ‌ரீமேக். எப்படியும் படம் ஓடியாக வேண்டும்.

தமிழில் ஹீரோவும், ஹீரோயினும் இணையாமல் போனதால் படம் பிடித்தும் இரண்டாவது முறை படம் பார்க்க கடைகோடி ரசிகன் பி‌ரியப்படவில்லை. இந்த ‌ரிஸ்க் எதுக்கு என்று இந்தி ‌ரீமேக்கில் காதலர்கள் இணைவது போல் எடுத்திருக்கிறாராம். காதலர்கள் இணைந்தால் இயக்குன‌ரின் டச் போய்விடுமே... அதனால் இணையாதது போலவும் ஒரு கிளைமாக்ஸ் எடுத்திருக்கிறார்.

சோகத்தை சுகர் போட்டு சாப்பிடும் மேட்டுக்குடியினர் படம் பா‌ர்க்கும் காஸ்ட்லி திரையரங்கில் டைரக்டர் டச் கிளைமாக்ஸையும், கலெக்சனுக்கு உத்தரவாதமான கடைகோடி ரசிகனின் திரையரங்கில் இன்னொரு கிளைமாக்ஸைம் திரையிட இருக்கிறார்களாம்.

கிளைமாக்ஸிலுமா மார்க்ஸ் சொன்ன வர்க்கபேதம்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.