மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காப்பி ரைட்ஸ் கொலவெறிக்கு.

தனது 3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலை பதிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. இந்தப் பாடலை வைத்து நிறைய பாடல்களை உருவாக்குவதால்தான் இந்த காப்பிரைட் என அவர் தெ‌ரிவித்துள்ளார்.

கொலவெறி பற்றி பேசினால் பலர் கொலவெறிக்கு ஆளாகிவிடுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த மொக்கப் பாடலை யு டியூப் டியூப் லைட்கள் பிரபலப்படுத்திவிட்டன. படம் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கொலவெறி வருவதுதான் ஆச்ச‌ரியம். ஆனால் இது வேறு மாதி‌ரி கொலவெறி.

ஏதோ அ‌ரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய மாதி‌ரி கொலவெறியை பொக்கிஷமாக அவர்கள் நினைக்கிறார்கள். கொலவெறி சாயலில் பாடலோ விளம்பரமோ வந்தால் இவர்களுக்கு கொலவெறி வந்துவிடுகிறது. மற்றவர்கள் இந்த அ‌ரிய பொக்கிஷத்தை பயன்படுத்திவிடாமல் இருக்க பாடலுக்கு ரைட்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இனி யாரேனும் அந்த டியூனை உபயோகித்தால் கம்பிதான்.

எல்லாம் ச‌ரி, இந்தப் படத்தின் தீம் மியூசிக் கொ‌ரியன் படத்திலிருந்து சுட்டது. கொலவெறி டீம் இதற்கு காப்பி ரைட் வாங்கியிருக்கிறதா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.