மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஸ்வரூபம் ஹாலிவுட்டில்

தனது விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டில் லேண்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறார் கமல்.

நூறு கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் விஸ்வரூபம் தயாராகி வருகிறது. இயக்கம், நடிப்பு என எல்லாமே கமல்தான். படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். அதேநேரம் போட்ட பணத்தையும் எடுக்க வேண்டும்.

படத்தின் கதையும், கமலின் திறமையும் இப்படத்தில் பளிச்சிடும் என்பதால் வார்னர் பிரதர்ஸ் மூலம் படத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் வேலையில் கமல் தீவிரமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. படம் ஹாலிவுட்டிலும் வெற்றி பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.