கோச்சடையான் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. மாற்றான் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதுக்குள்ள எப்படிப்பா...? நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. இது வசூல் ரேஸ் அல்ல. டெக்னாலஜி விஷயம்.
கோச்சடையான் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்படுகிறது என்பது விரல் சூப்புகிற குழந்தைக்குக்கூட இந்நேரம் தெரிந்திருக்கும். இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று மார்தட்ட முடியாதபடி மாற்றான் மறிக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இப்படத்தின் சில காட்சிகளுக்கு மோஷன் கேப்சர் டெக்னாலஜியை பயன்படுத்துகிறார்களாம். ஸ்ரீனிவாஸ் மோகன் இந்த பணிகளை மேற்கொள்கிறார். கோச்சடையான் இதுவரை தொடங்காததால் மாற்றான் முதலில் திரைக்கு வந்து இந்தியாவிலேயே முதல்முறை பெருமையை தட்டிச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.