செப்டம்பர் 26 வந்தால் அமலா பாலுக்கு 21 வயது முடிகிறது. இந்த சின்ன வயதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் இருப்பது அசாதாரணம். அமலா பாலின் அலட்டலும் அப்படியே என்பது கவலைதரும் சமாச்சாரம். பலரையிம் போல இவரது சினிமா பிரவேசமும் மாடலிங் வழியாகவே அமைந்தது.
என்னுடைய ஃப்ரி டிகிரியை முடித்துவிட்டு மாடலிங் செய்து கொண்டிருந்த போது என்னுடைய போட்டோவை இயக்குனர் லால் ஜோஸ் பார்த்திருக்கிறார். அவருக்கை என்னை பிடித்துவிட்டது. அவருடைய நீலத்தாமராவில் நடிக்க வைத்தார். அதுதான் என்னுடைய முதல் படம். அப்புறம் தமிழுக்கு வந்தேன். அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.
அமலா பால் நீலத்தாமரா படத்திலிருந்து அப்படியே மைனாவுக்கு தாவிவிடுவார். ஆனால் இதற்கு நடுவில் கொஞ்சம் தோல்விகளும் துயரச்சம்பவங்களும் உள்ளன. தமிழில் இவர் நடித்த முதல் படம் விகடகவி. ஆனால் முதலில் வெளிவந்த படம் வீரசேகரன். இதையடுத்து சாமியின் சிந்துசமவெளி. மைனா வெற்றிக்குப் பிறகு இந்த மூன்று படங்களையும் அமலா நினைவுகூர்வதில்லை. ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ்.
இப்போது இவரது கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
நான் இப்போது பிஸியாகிவிட்டேன் என்பது உண்மைதான். நிறைய கதைகள் கேட்டு அதில் எனக்குப் பிடித்த கதையை மட்டும் செலக்ட் பண்றேன். எல்லாத்தையும் நானே பார்த்து செய்றேன். என்னுடைய பேமிலியைகூட இன்வால்வ் ஆக விடுறதில்லை. எதையும் முடிவெடுக்கிற சுதந்திரத்தை அவங்க எனக்கு தந்திருக்காங்க. படங்களை செலக்ட் பண்ணி கமிட் பண்ணுவதால் நான் படங்களை தவிர்ப்பதாக எழுதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.
அமலா பாலுக்கு வாழ்வு தந்தது தமிழ் சினிமா. ஆனால் 3, ஜெயம் ரவி நடிக்கும் படம் என அடுத்தடுத்து தமிழ்ப் படங்களிலிருந்து விலகி தெலுங்குக்கு முன்னுரிமை தருகிறார். சரியா இது?
இப்படியொரு தவறான தகவல் எப்படி வந்ததுன்னே தெரியலை. இப்போதுதான் தமிழில் வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படின்னு மூன்றுப் படங்கள் முடிச்சிருக்கேன். தெலுங்கில் நல்ல ஆஃபர்கள் வந்ததால் தொடர்ந்து தமிழில் கால்ஷீட் தர முடியவில்லை. மற்றபடி தமிழ் சினிமா மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கு.
ஆர்யா, சித்தார்த், அதர்வா என்று இளம் ஹீரோக்களுடன் மட்டுமே அமலா பாலை பார்க்க முடிகிறது. இப்போது இளம் ஹீரோ என்றாலும் பெமிலியராக இருக்க வேண்டும் என்பது அமலாவின் கண்டிஷன். சீனியர் என்றால் அமலா பாலுக்கு இப்போதும் கசப்புதான்.
சீனியர் நடிகர்களுடன் ஏன் நடிக்கிறதில்லை என்று கேட்கிறாங்க. கதையும், என்னோட கேரக்டரும் பார்த்துதான் நான் படங்களை செலக்ட் பண்றேன். ஹீரோ யார்ங்கிறதுக்கு முக்கியத்துவம் தர்றதில்லை. இளம் நடிகர்களுடன் நடித்தது அதுவாக அமைந்தது. மற்றபடி ஜூனியர் சீனியர் பாகுபாடெல்லாம் கிடையாது.
தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார் அமலா பால். மூன்றுமே பெரிய ஹீரோ படங்கள். இதில் தமன்னா, ஹன்சிகா, டாப்ஸி போன்றவர்களுக்கு பொறாமை என புகைகிறது தெலுங்குப் படவுலகம்.
நான் யாரையும் போட்டியாக நினைக்கலை. முப்பொழுதும் உன் கற்பனைகள் பார்த்திட்டு தமன்னா போன் பண்ணுனாங்க. அதே போல் டாப்ஸி போனில் வாழ்த்து சொன்னாங்க. அதனால் எங்களுக்குள் போட்டி பொறாமைன்னு சொல்றதில் எந்த உண்மையுமில்லை.
கேரளாவில் இருந்து தமிழ், தெலுங்கில் பிரபலமாகும் நடிகைகள் பிறகு மலையாள சினிமா பக்கமே திரும்புவதில்லை. நயன்தாரா, அசினுக்கு அப்புறம் இப்போது அமலா பால்.
நான் மலையாள சினிமாவுக்கு முக்கியத்துவம் தர்றதில்லைங்கிறது உங்களோட கற்பனை. இரண்டு மலையாளப் படங்களில் கமிட்டாகியிருக்கேன். அதில் ஆகாசத்தின்டே நிறம் படம் முடிஞ்சிடுச்சி. ரன் பேபி ரன் படத்தின் வேலைகள் போய்கிட்டிருக்கு. அப்புறம் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.
மைனாவரை இழுத்துப் போர்த்தி நடித்த அமலா பால் இப்போது கிளாமர் குயின். இந்த சமரசம் தேவையா?
ஒரு லெவலுக்கு மேல் நாம் வெரைட்டியாக நடிக்க வேண்டியிருக்கு. அருந்ததியில் நடித்த அனுஷ்காதான் வானத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார்கள். வெரைட்டின்னு வரும் போது கிளாமரும் தேவைப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.