ஜூன் மாதம் வெளியாகும் பில்லா 2 படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மங்காத்தா கலெக்சனில் அள்ளியது போல் பில்லா 2 வும் கலக்கும் என்பது அவர்களின் எண்ணம். ஆனால் பலவான்களால்தானே எண்ணத்தை செயல்படுத்த முடியும்.
பில்லா 2 வின் தமிழக திரையரங்கு உரிமையை ஏறக்குறைய 26.5 கோடிக்கு வாங்கியிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதனை பில்லா 2 வின் தயாரிப்பாளரே தெரிவித்துள்ளார். அஜீத் படங்களைப் பொறுத்தவரை இதுதான் ஆகச் சிறந்த சேல்ஸ்.
கேரளா தவிர மற்ற அனைத்து திரையரங்கு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன. இந்தப் படத்தில் அஜீத் இலங்கை அகதியாக நடிப்பதாக எழுந்த வதந்தி காரணமாக வெளிநாடுவாழ் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.