வில்லன் பிரச்சனையில் சிக்கித் தவித்த சகுனி 23 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக செய்தி வந்தபோதே சந்தேகம். என்னடா பூனைக்குட்டி திடீர்னு தலைகாட்டுதே.
அதற்கான பதில் இன்று கிடைத்திருக்கிறது.
பல மாதங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் சகுனியை ஒருவழியாக தட்டி ஒட்டி ரிலீஸுக்கு தயார்ப்படுத்தியிருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டை மே 11ல் வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு பிடிக்காமல் அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்ததில் சகுனியின் பெயர் ரொம்பவே ரிப்பேராகியது. அதே நினைவுகளுடன் ஆடியோவை வெளியிட்டால் போணியாகாதில்லையா. அதுதான் 23 கோடிக்கு வியாபாரமானதாக திடீர் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆக, மே 11 சகுனி ஆடியோ வெளியீடு. அப்படியே மாத இறுதியில் படத்தையும் வெளியிடுகிறார்கள். அதாவது ஜூனில் பில்லா 2 வெளியாவதற்கு முன்பு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.