தனது பல வருட மன நெருக்கடியை இப்போது குமுறி தீர்த்திருக்கிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.
டைட்டானிக் படம் அளவுக்கு அப்படத்தின் புரோமோ பாடலான மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலும் உலகப் பிரசித்திப் பெற்றது. புகழ்பெற்ற பாடகி Celione Dion இந்தப் பாடலைப் பாடியிருந்தார். உலகமே இந்தப் பாடலைக் கேட்டு காதலில் கசிந்துருகியது. ஒருவருக்கு மட்டும் இந்தப் பாடல் குமட்டலை தந்திருக்கிறது. அவர் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.
இந்தப் பாடலை எனக்கு கேட்கவே பிடிக்கவில்லை. எல்லோரும் அற்புதமான பாடல் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அதனை சகித்துக் கொண்டேன். அந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த உண்மையைச் சொன்னது நிம்மதியாக இருக்கிறது என்று வின்ஸ்லெட் வெம்பி தீர்த்திருக்கிறார்.
1912-ல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது. அதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் வகையில் டைட்டானிக் 3டி-யில் வெளிவந்திருக்கிறது. இந்த நேரத்தில் வின்லெட்டின் ஸ்டேட்மெண்ட் மை ஹார்ட் வில் கோ ஆன் பாடலின் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை தந்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.