மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3D டைட்டானிக்கில் ஒரே ஒரு மாற்றம்

ஹாலிவுட் உலகின் சினிமா நகரமாக இருப்பதில் ஆச்ச‌ரியமில்லை. அந்த உயரத்தை அவர்கள் எட்டுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவம், டெடிகேஷன் அடுத்த நூறு வருடங்களிலாவது நமக்கு வருமா என்று தெ‌ரியவில்லை. ச‌ரி மேட்டருக்கு வருவோம்.

டைட்டானிக் படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். நிறையை தவிர குறை எதுவும் நமது கண்களில் பட்டதில்லை. ஒ‌ரி‌ஜினல் டை‌ட்டானிக் எப்படி இருந்தது என்பதை ஆராயந்து அப்படியே உருவாக்கியிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். இப்போது டைட்டானிக் மூழ்கியதன் நூறாவது வருடத்தை நினைவுகூரும் விதத்தில் 3டி-யில் வெளியிடுகிறார்கள்.

இந்த நேரத்தில் கேமரூன் யூ ஆர் ராங் என்று பெல் அடித்திருக்கிறார் நீல் டி கிராஸி என்ற வானிலை ஆராய்ச்சியாளர். டைட்டானிக்கின் இறுதி காட்சியை இப்போது அப்படியே நினைவுக்கு கொண்டு வாருங்கள். கடலில் மரத்துண்டின் மீது கேட் வின்ஸ்லெட் படுத்திருக்கிறார். வானத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. எஸ், இந்த இடம்தான்.

டைட்டானிக் மூழ்கியது 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி அதிகாலை 4.20 மணி. இந்த நேரத்தில் நீங்கள் காட்டியிருப்பது போல் நட்சத்திரங்கள் வானில் தென்படாது, நட்சத்திரங்களை தவறாக காட்டியிருக்கிறீர்கள் என்று நீல் கேமரூனுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார். நம்மூர் இயக்குனர் என்றால் கடிதத்தில் காக்கா எச்சத்தை துடைத்து கா‌ரில் ஏறிப் போயிருப்பார்கள். கேமரூன் பொறுப்பாக நீல் சொன்னது உண்மைதானா என்று அவ‌ரிடம் சான்றுகள் வாங்கி நட்சத்திரங்களின் அமைப்பை மாற்றியிருக்கிறார். 3டி டைட்டானிக்கில் அவர் செய்திருக்கும் ஒரே மாற்றம் இதுதானாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.