
விஜய், கௌதம் இணையும் யோஹன் அத்தியாயம் ஒன்று ட்ராப்பாகிறது என்றொரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதனை மறுக்கும்விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.
நீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. துப்பாக்கியை முடித்து விஜய் ஃப்ரீயானால் உடனே யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீரிஸுகளை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கௌதமின் இந்தப் பேச்சு யோஹன் ட்ராப்பாகவில்லை என்பதையும், கௌதம், விஜய்யின் அடுத்தப் படம் யோஹன் என்பதையும் காட்டுகிறது. ஆனால் இதுவரை விஜய் தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது முக்கியமானது.
 

 




0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.