சென்னை பாக்ஸ் ஆபிஸில் கௌரவமான இடம் வழக்கு எண் படத்துக்கு கிடைத்திருக்கிறது. காமெடி கமர்ஷியலுக்கு அடுத்த இடம்தான் என்றாலும் இந்தளவேனும் இதற்கு ஆதரவு தந்தது ஆறுதல்.
3. வழக்குஎண் 18/9
பாலாஜி சக்திவேலின் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 55.6 லட்சங்கள். முதல்வார வசூல் அளவுக்கு இரண்டாவது வாரமும் வசூல் செய்திருப்பது ஆரோக்கியமான விஷயம். சென்ற ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 1.75 கோடி.
2. கலகலப்பு
சிவா, சந்தானம், இளவரசு முக்கூட்டணியின் காமெடி தர்பார் காரணமாக கலகலப்புக்கு நல்ல கலெக்சன். முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 67.3 லட்சங்கள். சுந்தர் சி. இயக்கிய எந்தப் படத்தையும்விட இதற்குதான் அதிக ஓபனிங்.
1. ஒரு கல் ஒரு கண்ணாடி
தொடர்ந்து அதே முதலிடத்தில் ஓகே ஓகே. ரஜினி படம்தான் இப்படி அசைக்க முடியாதபடி பாக்ஸ் ஆஃபிஸில் உட்கார்ந்திருக்கும். அறிமுக நடிகரின் படமெல்லாம் இப்படி பட்டையை கிளப்புவது ஆச்சரியம். அவர்களாகப் பார்த்து முதலிடத்தை காலி செய்தால் உண்டு. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 85 லட்சங்கள். இதுவரை 15 கோடிகளை சென்னையில் மட்டும் இப்படம் வசூல் செய்துள்ளது. இது எந்திரனைவிட இரண்டு கோடிகள் கம்மி. தசாவதாரத்தைவிட ஐந்து கோடிகள் அதிகம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.