இப்போது வரும் நடிகர்களுக்கு சகலகலாவல்லவனாகும் விருப்பம் இருக்கிறது. வந்தோமா நடித்தோமா என்றில்லாமல் பாடுவது, எழுதுவது, இயக்குவது, தயாரிப்பது என சகலவழிகளிலும் சதாய்க்கிறார்கள்.
நடிக்க வரும்போதே கண்டிப்பா படம் இயக்குவேன் என்று பயமுறுத்தியவர் தனுஷ். பாடுவது, பாடல் எழுதுவது என்று கலங்கடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு படத்தை தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
சமீபத்திய தகவல் இந்தப் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருப்பது தனுஷாம். செல்வராகவனுடன் இணைந்து மயக்கம் என்ன படத்தின் கதையை எழுதியிருந்தாலும் முழு ஸ்கிரிப்டை தனியாளாக எழுதியிருப்பது இதுதான் முதல்முறையாம்.
3 மாதிரி இருக்கப் போகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.