மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினியை கேவலப்படுத்தும் ராம் கோபால் வர்மா

அதிரடியாக எதையாவது கூறி செய்திகளில் எப்போதும் இடம் பெற்றிருப்பார் ராம் கோபால் வர்மா. அவ்வப்போது ரஜினி பற்றிய கருத்துகளும் இவரிடமிருந்து உதிரும்.

தனது இந்தி சிவாவில் ரஜினியை இமிடேட் செய்யும் காமெடி கேரக்டர் ஒன்றை வைத்திருப்பார் வர்மா. ரஜினியை இவருக்குப் பிடிக்காதோ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ரஜினியை வைத்து படம் பண்ண ஆசை என்று அதிரடியாக ஒரு குண்டை துக்க்கிப் போட்டார். ஆறு மாதங்கூட ஆகவில்லை திருப்பதியிலிருந்து திருவண்ணாமலைக்கு பல்டியடித்திருக்கிறார்.

ரஜினியை வைத்து படமெடுப்பதற்கு என்னால் முடியாது. அவரை வைத்து படம் எடுக்க என்னுடைய ஸ்டைலையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றெல்லாம் சொல்லியிருப்பவர் அடுத்ததாகச் சொன்னதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமிதாப்பச்சனை சினிமா என்று வைத்துக் கொண்டால் ரஜினி ஸ்பெஷல் எபெக்ட்ஸ்.

வர்மாவின் இந்த கமெண்ட் ரஜினி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. டிபார்ட்மெண்ட் வெளிவருகிற நேரத்தில் இதுபோன்ற கான்ட்ரவர்ஸி வர்மாவுக்கு தேவையா?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.