
ஒரு படத்துக்கும் அடுத்தப் படத்துக்கும் நடுவில் இடைவெளிவிடுவதில் பாலாஜி சக்திவேலைவிட இரு மடங்கு சமர்த்தர் இயக்குனர் சசி. பூ படத்திற்குப் பிறகு இவர் என்ன செய்கிறக்ர் என்பது மர்மமாகவே உள்ளது.
பூ வுக்கு ரொம்ப நாள் கழித்து 555 என்ற படத்தை எடுப்பதாக செய்திகள் வந்தன. ஹீரோ பரத். அவ்வப்போது பரத் 555 பற்றி சொல்லி வந்தாலும் படத்தின் நிலை தற்போது என்ன என்று யாருக்கும் சரிவர தெரியவில்லை.
இந்நிலையில் ம் என்ற படத்தை எடுக்கயிருப்பதாக சசி தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிப்பார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்தை ரோஜாக்கூட்டம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் சசி. பூ படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.