பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஏது ஸ்டைல்? மண்டையில் அடித்துக் கொள்ளும் வாசகர்களே... இது தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண்.
பதினொரு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் ஒரு மெகா ஹிட்டை கொடுத்திருக்கிறார் பவன் கல்யாண். ஆனாலும் இவரது ரசிகர் பட்டாளம் குறையவில்லை. காரணம் பவனின் பெக்யூலியர் ஸ்டைல். இவர் அணியும் உடைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ரொம்பவே வரவேற்பு. கப்பர் சிங் படத்தில் இவர் அணிந்து வரும் உடைகளை அப்படியே இமிடேட் செய்கிறது யூத் வட்டாரம்.
தனது ஸ்டைலை பிசினஸாக்கினால் கோடிகள் அள்ளலாம் என்பது பவனுக்கு தெரிந்திருக்கிறது. தனது பர்சனல் காஸ்ட்யூம் டிஸைனர் ராஜேஷ் மோரை வைத்து பவர் ஸ்டார் கலெக்சன் என்ற பெயரில் துணிக்கடை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதில் உள்ள அனைத்து உடைகளும் ராஜேஷ் வடிவமைத்ததாக இருக்கும்.
திருமதி ரஜினி பாபா கர்ச்சீஃப் விற்ற கதைதான் ஞாபகத்துக்கு வருது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.