மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அஜித் மீது பதினைந்து லட்சம் ரூபாய் மோசடி புகார்.

ஆச்ச‌ரியமாகதான் இருந்தது. அ‌ஜித் மீது புகார். புகார் தந்தது செவன்த் சேனல் நாராயணன் என்பதால் ஆச்ச‌ரியத்தின் அளவு இரு மடங்கானது. சும்மாச்சுக்கும் புகார் தருகிற வெட்டி ஆபிசரல்ல நாராயணன்.

1996 ஆம் வருடம் இரு தவணையாக பதினைந்து லட்சம் ரூபாயை நாராயணனிடமிருந்து வாங்கினாராம் அ‌ஜித். என்னை தலாட்ட வருவாளா படத்தில் நடிப்பதாகச் சொல்லியே இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாராம். ஆனால் படத்தில் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக வேறு படத்தில் நடிக்க கால்ஷீட் தருவதாக தெ‌ரிவித்தாராம். வருடங்கள் ஓடிய பிறகும் கால்ஷீட் தரவில்லை.

1996 ல் தந்த பதினை‌ந்து லட்சம் வட்டிப் போட்டு கோடியை தாண்டி நிற்பதாக கணக்கு காட்டுகிறார் நாராயணன். புகார் தயா‌ரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என போயிருக்கிறது. அ‌ஜித் தரப்பு என்ன சொல்கிறது, பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.