
TATA Nano கார் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது ஆச்சரியத்துக்குரிய காராக அது இருந்தது. இப்போது அவஸ்தைக்குரிய கார். எப்போது கார் எரியத் தொடங்கும் என்ற பயம் இந்தக் காரைக் குறித்து உள்ளது. சமீபத்தில்கூட தமிழகத்தில் ஒரு கார் திடீரென எரிந்தது.
எதிர்பார்த்ததைவிட இந்தக் காரின் விற்பனை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை தூக்கி நிறுத்தும்விதமாக நடிகர் தனுஷை பிராண்ட் அம்பாசிடராக்கியிருக்கிறார்கள். தற்போது கார் விளம்பரத்துக்காக தனுஷ் மும்பையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த விளம்பரத்தை இயக்குவது வெற்றிமாறன். இவர் இயக்கும் முதல் விளம்பரப் படம் இது. ஒளிப்பதிவு வேல்ராஜ். விளம்பரத்துக்கு இசை கொலவெறி புகழ் அனிருத்.
ஜுன் 8 ஆம் தேதி இந்த விளம்பர படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது.



0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.