![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJe6fiq0aSbs3yWv3WRSQ0-x3fk4JU-QCcAyCTbbBNVAF7WOiQQ2vR25l0HgR2jtFXJb7dY5kUjue55oMLfY8mfMQTqWF60A3oM2u3g-EWAZDMUL96QmkeWaHyUpQHMiRL2CX898npMvk/s320/Surya+in+Selvaraghavan+Movie+watch+online+and+download+Surya+Selvaraghavan.jpg)
செல்வராகவன் சிறந்த ப்ளேயர். ஆனால் கோல் அடிக்க மட்டும் தெரியாது. கடைசிநேர சொதப்பல்கள் ஆளை எப்போதும் கவிழ்த்துவிடும்.
ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரமை வைத்து க்ரைம் த்ரில்லர் எடுப்பதற்காக வடக்கே வண்டியேறினார். ஒரே வாரத்தில் யு டர்ன். படம் ட்ராப். அடுத்து கமல்ஹாசன். படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்பே புஸ்ஸ்ஸ்...
இந்தப் பின்னணியில்தான் இந்த செய்தியை ஆராய வேண்டியிருக்கிறது. தற்போது ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை எடுத்து வருகிறார் செல்வா. படத்தை எடுப்பதற்குப் பதில் தயாரிப்பாளரை படுத்தி எடுப்பதாக கேள்வி. இந்நிலையில் இவரின் இயக்கத்தில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். தயாரிப்பு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா.
ஆக்ஷன் அதகளம் இல்லாமல் அண்ணன் தம்பி படம் நடிப்பதில்லை. அப்படியிருக்க செல்வாவின் படத்தில் நடிக்க சூர்யா எப்படி ஒப்புக் கொண்டார்? அதைவிடவும் முக்கியமான கேள்வி இந்தமுறையாவது செல்வா கோல் அடிப்பாரா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.