மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பார்வதி ஓமனக்குட்டன் நட்சத்திர பேட்டி அஜீத் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்.

பார்வதி ஓமனக்குட்டன். பெயரை நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாத இறுதி முதல் அடுத்த சில வாரங்களுக்கு தொந்தரவு செய்யப் போகும் பெயர் இது. அஜீத்தின் பில்லா 2 படத்தின் நாயகி. முன்னாள் உலக அழகி என்பது இன்னொரு சிறப்பம்சம். பார்வதி ஓமனக்குட்டன் தனது பெயர் முதல் கேரியர்வரை பகிர்ந்து கொள்கிறவர்.

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென் என்று உலக அழகிகளின் பெயர்கள் மாடர்னாக இருக்க உங்கள் பெயர் மட்டும் பார்வதி ஓமனக்குட்டன்... கொஞ்சம் ட்ரெடிஷனாக தெரிகிறதே?

இதுதான் உங்கப் பிரச்சனையா. என்னோட அம்மா கொஞ்ச காலம் சிவ பக்தையா இருந்திருக்காங்க. அதாவது அவங்க தமிழ்நாட்ல இருந்த நேரம். அதனால் எனக்கு பார்வதின்னு பெயர் வச்சாங்க. பார்வதின்னா சிவனில் பாதின்னு அர்த்தமாம்.

ஓமனக்குட்டன்...?

அது என்னோட அப்பா பெயர். அதுக்கு அர்த்தம் வேணும்னா அவர்கிட்டதான் கேட்கணும், எனக்கு தெரியாது.

பொதுவா உலக அழகிகள் பட்டம் வென்றதும் நேராக வந்திறங்குற ஏரியா பாலிவுட். நீங்க மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்?

அழகா இருந்தால் சினிமாவில் நடிக்கணுமங்கிற விதி இருக்கா என்ன? ஒரு சாதாரண பெண்ணா இருக்கணுறம்ங்கிறதுதான் என்னோட ஆசை. சினிமா பிடிக்கும். ஆனா நடிக்கணும்னு நினைச்சதில்லை. எல்லோரும் வற்புறுத்த சரி என்னதான் பார்த்திருவோம்னு ஒரு இந்திப் படத்தில் நடிச்சேன். படம் சரியா போகலை. போயிருந்தால் ஏற்கனவே பிஸியான நடிகை ஆகியிருப்பேன்.

சரி, பில்லா 2 வில் எப்படி கமிட்டானீங்க?

ஒருமுறை சினிமா பங்ஷனுக்காக சென்னை வர வேண்டியிருந்தது. அப்போது நயன்தாரா, பிரபுதேவா காதல் பற்றி மீடியா என்கிட்ட ஏதோ கேட்டாங்க. நானும் ஏதோ பதில் சொன்னேன். மறுநாள் பார்த்தால் அதுதான் தலைப்பு செய்தி. அப்போ நிறைய டைரக்டர்ஸ் நடிக்கிறீங்களான்னு கேட்டாங்க. அப்போதுதான் பில்லா 2 வாய்ப்பு வந்தது. அஜீத் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் உடனே ஓகே சொல்லிட்டேன்.

ஆக, அஜீத்துக்காகதான் ஒத்துகிட்டீங்க...?

ஆமா. அதேநேரம் டோலட்டி ஐந்து நிமிடம் சொன்ன கதை எனக்குப் பிடிச்சிருந்தது. அதிலயே இது வழக்கமான படம் இல்லைங்கிறது புரிஞ்சது. இது நிறைய பயணங்கள் வழியாக நகர்கிற கதை.

அஜீத் படம், தமிழில் நடிக்கிற முதல் படம்... எப்படி இருந்தது பில்லா அனுபவம்?

நான் சின்ன வயசிலிருந்தே நல்ல படங்களை மட்டும்தான் பார்ப்பேன். அப்படியொரு நல்ல படம்தான் இந்த பில்லா 2. எனக்குப் பிடித்தமான படம்ங்கிறதால் ரொம்ப ஈடுபாட்டோடு நடிச்சேன். ரொம்ப நல்ல அனுபவமாக இது இருந்தது.

அஜீத் வீட்ட்டிற்கு போனீர்களாமே?

வாவ்... நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். அஜீத் இங்க எவ்ளோ பெரிய ஆள். ஆனா வீட்டில் என்ற ஆடம்பரமும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக இருக்கார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். இப்படியும் எளிமையாக இருக்க முடியுமா?

படத்தில் உங்க கேரக்டர்...?

ரொம்ப நல்ல கேரக்டர். அனுபவித்து நடிச்சிருக்கேன். இதுக்கு மேல இப்போது சொல்ல முடியாது.

சினிமாவில் இருந்தாலும் ஒட்டாமலே பதிலளிக்கிறீர்களே ஏன்?

அரசியல், கிரிக்கெட், சினிமா இந்த மூணும்தான் இந்தியாவை ஆண்டுகிட்டு இருக்கு. பட் இந்த மூணு மேலேயும் எனக்கு இன்ட்ரஸ்ட் கிடையாது.

அப்படின்னா தொடர்ந்து நடிப்பீர்களா?

பில்லா 2 மாதிரி படமும், அஜீத் மாதிரி ஹீரோவும் அமைந்தால் நடிப்பேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.