மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தோல்வியில் துவண்டது பில்லா 2 - தூக்கி நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பம்.

நல்லவங்களை கண்டு பிடிக்கிறதுதான் கஷ்டம். அ‌ஜீத் பில்லா 2-வில் சொல்லும் இந்த வசனத்துக்கு அவரது படமே உதாரணமாகிப் போனதை என்னவென்று சொல்ல. படம் வெளியான முதல்நாளே படம் ரொம்ப சுமார் என்று விமர்சனங்கள் வரத் தொடங்கின. மூன்றே நாள்... தியேட்டர்கள் காலி. படம் மோசம் என்றால் இரண்டே நாளில் உஷாராகிவிடுகிறார்கள்.

விமர்சனத்தைப் பார்த்து மூலையில் சுருண்டால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது. அதனால் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பில்லா 2 டீம். முதல்கட்டமாக படத்தில் இடம்பெறாத இதயம் என்ற பாடலை சே‌ர்க்கப் போகிறார்களாம். அதையடுத்து மேக்கிங் ஆஃப் பில்லா 2.

படத்தின் மைனஸில் ஒன்று பாடல்கள். அதேபோல் படத்தைப் பார்த்து கடுப்பாகி வெளியேறும் ரசிகனை மேக்கிங் ஆஃப் பில்லா 2 இன்னும் கடுப்பேற்றாது என்று என்ன உத்தரவாதம்.

முயற்சிகள் ‌ரிவர்ஸ் கிய‌ரில் திருப்பியடிக்காமல் இருந்தால் ச‌ரிதான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.