பிரபுதேவா இந்தியில் அடுத்து இயக்கப் போவது அவர் தெலுங்கில் இயக்கிய படத்தை. இந்தப் படம் சம்திங் சம்திங் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
தெலுங்கு, தமிழ் இரண்டும் வெற்றி பெற்றதற்கு த்ரிஷாவும் ஒரு காரணம் என்ற எண்ணம் நடனப்புயலுக்கு. இந்தி ரீமேக்கிலும் நடிக்க முடியுமா என்று த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறார். அவருக்கு சம்மதம்தான். ஆனால் கால்ஷீட்?
தமிழ், தெலுங்கில் த்ரிஷாவுக்கு நிற்க நேரமில்லை. இதில் பல்க்காக டேட்ஸ் கேட்டிருக்கிறார் பிரபுதேவா. கமிட் செய்த புராஜெக்ட்கள் முடிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பிரபுதேவா படத்துக்கு டாட்டா காண்பித்ததாக த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த வாய்ப்பை கைப்பற்றியிருப்பது ஸ்ருதிஹாசன். கப்பர் சிங்குக்குப் பிறகு ஸ்ருதியின் மார்க்கெட் மளமளவென உயர்ந்ததும் இந்திப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு ஒரு காரணம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.