சந்தானம், பிரம்மானந்தம்... உச்சரிப்பு ஒரே மாதிரி இருப்பதாலா தெரியவில்லை பிரம்மானந்தம் வெளுத்து வாங்கும் ஆந்திராவுக்கு வரும்படி சந்தானத்தை அழைத்துக் கொண்டிருக்கிறது தெலுங்கு சினிமா. அக்கட பூமிக்கு ஆசைப்பட்டு நிற்கிற நிலத்தடி வழுக்கிவிடுமோ என்கிற பயமும் உண்டு.
அதேநேரம் அங்கேயும் கொஞ்சம் சவுண்ட் விட்டுப் பார்க்கலாமே என்கிற நப்பாசையும் உண்டு. இந்த இரண்டுக்கும் சேதமில்லாத வகையில் ஓகே ஓகே படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
உதயநிதி நேரடியாகச் சென்று ஆடியோவை ஆர்ப்பாட்டமாக வெளியிட்டார். சித்தார்த், ஹன்சிகா என்று இளமைப்பட்டாளம் விழாவில் கலந்து கொண்டது.
ஓகே ஓகே காமெடி ஆந்திராவில் வொர்க்அவுட்டானால் தெலுங்கிலும் நடிக்கலாம் என்கிற எண்ணம் சந்தானத்துக்கு இருக்கிறதாம். தமிழைவிட தெலுங்கில் கஜானாவை கொஞ்சம் அதிகமாகவே திறப்பார்கள். செமத்தியான ஆஃபர் என்றால் சந்தானம் சரி சொல்லாமலாப் போகப் போறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.