
படித்த, சென்சிபிளான நடிகைகள் எந்த மொழியிலும் குறைவு. பத்மப்ரியா விதிவிலக்கு. எம்பிஏ படித்து பெங்களூருவில் ரிஸ்க் கன்சல்டன்டாக வேலை பார்த்த இவர் மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்தவர். முதல் படம் தெலுங்கு என்றாலும் பிரபலப்படுத்தியது தமிழ், வளரச் செய்தது மலையாளம். அவரின் உரையாடலிலிருந்து.
உங்களைப் பற்றி சுருக்கமாக...?
நான் பிறந்தது டெல்லி. அப்பா இந்தியன் ஆர்மியில் பிரிகேடியராக இருந்தார். அதனால் பல இடங்களில் படிக்க வேண்டியதானது. எம்பிஏ முடித்த பிறகு வேலை. மாடலிங் மூலம் சினிமா. முதல் படம் தெலுங்கு. நட்புக்காகதான் சீனு வாஸந்தி லக்ஷ்மிங்கிற அந்தப் படத்தில் நடிச்சேன். உங்களுக்கு அந்தப் படம் தெரியும். தமிழில் விக்ரம் நடிப்பில் காசி ன்னு வந்ததே.
ஆனால் நீங்க அறிமுகமானது மலையாளம் என்று பலரும் சொல்கிறார்களே...?
நான் தெலுங்கில் அறிமுகமானது 2003ல். அதே வருஷம் பிளெஸ்ஸியின் காழ்ச்சா படத்தில் நடித்தேன். அதனால் பலரும் என்னுடைய முதல் படம் காழ்ச்சா என்றுதான் நினைக்கிறார்கள். அதே மாதிரி தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பதால் நானொரு மலையாளி என்று நினைப்பவர்களும் உண்டு.
தமிழில் ஏன் அதிகமாக நடிப்பதில்லை?
வாய்ப்பு வந்தால் நடிக்க நான் தயார். நல்ல கதை, நல்ல கேரக்டர் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே டிமாண்ட். ராமின் தங்கமீன்களில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் வந்தால் தமிழில் வேறு நல்ல வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது.
பத்மப்ரியா என்றால் ஹோம்லி. ஆனால் திடுப்பென்று கிளாமராகவும் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறீர்களே...?
நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதும் சொன்னதில்லை. ஹோம்லியான கேரக்டர்கள் எதேச்சையாக அமைந்தது. கிளாமர் வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும்.
மலையாளத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்களே...?
ஒய் நாட்? ஏன் ஆடக் கூடாது. எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும் பரதநாட்டியம் முறையாக படித்திருக்கேன். இயக்குனர் அமல் நீரத்திடம் ஒருமுறை ஏன் எனக்கு அயிட்டம் டான்ஸ் வாய்ப்பெல்லாம் தர்றதில்லைன்னு கேட்டேன். அதை ஞாபகம் வைத்து அவரின் பேச்சிலர்ஸ் பார்ட்டி படத்துக்கு கூப்பிட்டார். நானும் ஒரு பாட்டுக்கு ஆடினேன்.
அதில் ஸ்கிரிட் அணிந்திருந்தீர்கள்..?
ஆமா, நடிகையான பிறகு காஸ்ட்யூமில் கட்டுப்பாடு வைப்பது சரியில்லை என்பது என் எண்ணம். படத்தின் சிச்சுவேஷனுக்கு தேவை என்றால் பிகினியில் நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
மலையாளத்தில் அதிகமும் மம்முட்டியுடன் நடித்திருக்கிறீர்களே...?
முதல் படம் காழ்ச்சா முதல் கோப்ரா வரை பல படங்களில் மம்முட்டியுடன் நடித்திருக்கிறேன். அவர் ஒரு பிறவிக் கலைஞன். அவருடன் நடித்ததால் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது.
இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்..?
நான்கு மலையாளப் படங்கள். அதில் ஒன்று ஹரிகரனின் ஏழாமத்தே வரவு. பழஸிராஜாவுக்குப் பிறகு அவர் இயக்குகிற படம். தமிழில் தங்மீன்கள் முடிந்துவிட்டது. ரிலீஸுக்கு காத்திருக்கிறேன்.
நெம்பர் 66 மதுரா பஸ் படத்தில் உங்களுக்கும், இயக்குனருக்குமான பிரச்சனை...
அது எனக்கும் இயக்குனருக்கும் உள்ள பிரச்சனை. அதில் மற்றவர்கள் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.
உங்களுடைய ட்ரீம் ரோல்?
ஏதாவது ஒரு ரோலைச் சொன்னால் அது ஒரு படத்தோடு முடிந்துவிடுமே. நான் நடிக்க விரும்புகிற ட்ரீரிம் ரோல்கள் நிறைய இருக்கு. ஒன்று மட்டும் இல்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.