மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காத்திருந்த விஜய் கூட்டணிக்கு தள்ளிவைப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

கள்ளத்துப்பாக்கி படத்தின் இயக்குனரும், தயா‌ரிப்பாளரும் துப்பாக்கிப் படத்தின் டைட்டிலுக்கு தடை கோ‌ரி நீதிமன்றம் சென்றதும், துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த இடைக்கால‌த் தடை விதிக்கப்பட்டதும் ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கு நன்கு தெ‌ரிந்திருக்கும். துப்பாக்கி சார்பில் எதிர்மனு கொடுக்கப்பட்டது. துப்பாக்கி வேறு கள்ளத்துப்பாக்கி வேறு என்று தயா‌ரிப்பாளர் தாணு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

எப்படியும் தடை நீக்கப்படும், படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஹீட்டரை பொருத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் முருகதாஸ்.

ஆனால் தீர்ப்பை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி. தடை நீங்கும் தடபுடலாக விளம்பரத்தை ஆரம்பிக்கலாம் என்றிருந்த விஜய், முருகதாஸ், தாணு முக்கூட்டணிக்கு இந்த தள்ளிவைப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.