மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தொடங்கியது த்ரிஷா ஜீவா இணையும் படம்.

ஜீவா, த்‌ரிஷா முதல்முறை இணைந்து நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் பூஜை சென்னையில் எளிமையான முறையில் நடந்தது.

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களுக்குப் பிறகு ‌ஜீவா ஒப்புக் கொண்ட படம் என்றென்றும் புன்னகை. வாமனன் படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் த்‌ரிஷா. இதன் பூஜை சென்னையில் நடந்தது. த்‌ரிஷா, ‌ஜீவா, ஆர்.பி.சௌத்‌ரி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இ‌ன்று தொடங்கும் படப்பிடிப்பில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார். இவருக்கும் ‌‌ஜீவாவுக்குமான காம்பினேஷன் காட்சிகள் ஆகஸ்டில் படமாகும் என தெ‌ரிகிறது. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களை முடிக்க வேண்டியிருப்பதால் இந்த தாமதம்.

வினய் ராய், சந்தானம், நாசர், லிசா ஹைடன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.