மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> குழப்பத்தில் ஷங்கர் படம் பெயர் மாறுகிறது ?

ஷங்கர் அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டிருக்கிறார். அதற்குள் பல பிரச்சனைகள். குறிப்பாக ஹீரோயின்.

முதலில் ஒப்பந்தமான சமந்தா திடீரென விலகிக்கொள்ள அடுத்து யாரை தேர்வு செய்வது என்று குழப்பம். அனேகமாக எமி ஜாக்ஸனாக இருக்கலாம் என்கிறார்கள். பரவாயில்லை என்ற லிஸ்டில் வரும் நடிகைகளில் அவ‌ரிடம் மட்டுமே ஷங்கர் எதிர்பார்க்கும் பல்க் கால்ஷீட் உள்ளது.

ஐ என்று படத்துக்கு பெயர் வைத்திருந்தாலும் இன்னும் பொருத்தமான பெயரை ஷங்கர் ஆலோசித்து வருவதாக விக்ரம் கூறியுள்ளார். அதேநேரம் ஐ என்ற பெய‌ரிலேயே படத்தின் டைட்டிலை டிஸைன் செய்யும் வேலை முடிந்திருக்கிறது.

பி.சி.ஸ்ரீராம் ஐ-க்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.