மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேகம் கூட்டும் சிம்பு ஹைதராபாத் செல்லும் வாலு.

வாலு கதையின் மீது சிம்புக்கு அப்படியென்ன பிடிப்பு என்று தெ‌ரியவில்லை. போடா போடி, வேட்டை மன்னனில் காட்டாத வேகத்தை இந்தப் படத்துக்கு காட்டுகிறார். அடுத்த வாரம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு.

ஹன்சிகா, சந்தானம் என்று கவர்ச்சி, காமெடி டீமைப் பார்க்கும் போது ஓகே ஓகே எஃபெக்ட் தெ‌ரிகிறது. சிம்புவின் தன்முனைப்பு தடுக்காமல் இருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் மொழி தெ‌ரியாத வில்லனை நடிக்க வைப்பதுதான் ஃபேஷன். பில்லா 2-வில் வரும் இரண்டு பேருமே வேற்று மொழி ஆசாமிகள். துப்பாக்கியிலும் அப்படியே. அலெக்ஸ் பாண்டியனில் மிலிந்த் சோமன். சிங்கம் 2-வில் மும்பை மற்றும் தென்னாப்பி‌ரிக்கா பார்ட்டிகள். வாலு மட்டும் விதிவிலக்காக இருந்தால் எப்படி.

வாலு வில்லனாக நடிக்கயிருப்பவர் கன்னடப் படங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆதித்யா. அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்கும் படப்பிடிப்பில் ஆதித்யாவும் கலந்து கொள்கிறாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.