மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கேடி பில்லா கில்லாடி ரங்கா மியூசிகல் ரொமாண்டிக் காமெடி மிக்ஸ்.

பாண்டிரா‌ஜ் இயக்கிவரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகைப்படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் தெ‌ரிவித்துள்ளார்.

மெ‌ரினாவுக்குப் பிறகு பாண்டிரா‌ஜ் ஆரம்பித்திருக்கும் இந்தப் படம் ரொமாண்டிக் காமெடியாக உருவாகி வருகிறது. அவர் அறிமுகப்படுத்திய விம‌ல், சிவ கார்த்திகேயன் இருவரும் ஹீரோக்கள். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது திருச்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக முதல் ஷெட்யூல்ட் முடிந்த பிறகே படத்தின் பெயரை அறிவிப்பார் பாண்டிரா‌ஜ். இந்தமுறை படப்பிடிப்புக்கு முன்பே பெயரை அறிவித்து ஆச்ச‌‌ரியப்படுத்தினார். இன்னொரு ஆச்ச‌ரிய‌ம், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்திருப்பது. மூன்று படங்களை இதுவரை இயக்கியிருப்பவர் நான்காவது படத்தில் முதல்முறையாக யுவனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அப்படீன்னா... மியூசிகல் ரொமாண்டிக் காமெடி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.