தமன்னா அடுத்த ஸ்ரீதேவியா இல்லை ஐஸ்வர்யாராயா என்பது தெரியாமல் திகைத்து நிற்கிறான் ரசிகன். இந்தியில் தமன்னா நடிக்கும் ஹிம்மத்வாலா படத்தை இயக்குகிறவர் அடுத்த ஸ்ரீதேவி என்று தமன்னா தலையில் அண்டார்ட்டிகா ஐஸை வைக்கிறார். ஹிருத்திக் ரோஷன் இவரைவிட்டால் நாட்டியத்துக்கு கியாரண்டி இல்லை என்கிறார்.
அப்படியே ரிவர்ஸில் ஆந்திரா பக்கம் வந்தால் இன்னும் ஆச்சரியம். பொதுவாக ஹீரோவுக்குதான் ஓபனிங் பாடல் வைப்பார்கள். பிரபாஸ், தமன்னா நடித்திருக்கும் ரிபெல் படத்தில் தமன்னாவுக்கு ஓபனிங் சாங் வைத்திருக்கிறாராம் இயக்குனர் லாரன்ஸ்.
ஹிம்மத்வாலா வெளியாகும் முன்பு இன்னொரு படம் தமன்னாவை தேடி வந்துள்ளது. ரமணா இந்தி ரிமேக். முருகதாஸின் ரமணாவை ஜெயம் ராஜா இந்தியில் ரிமேக் செய்கிறார். முதலில் அப்படியெல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கில் பப்ரெஷ்ஷான படத்தை இயக்குகிறேன் என்றவர் இப்போது தமன்னாவிடம் ரமணா ரிமேக்கிற்காக கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். இந்தப் படத்தில் அக் ஷய்குமார் விஜயகாந்த் நடித்த வேடத்தில் நடிக்கிறார்.
விரைவில் படத்தைக் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.