மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னாவிற்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிய ஹிருத்திக்ரோஷன்.

தமன்னா அறிமுகமானது இந்திப் படத்தில். படம் சூப்பர் ப்ளாப்பானதால் தென்னகத்தை தேடி வந்தார். இப்போது இங்குள்ள முன்னணி நடிகைகளில் அவரும் ஒருவர். என்றாலும் இந்தியில் கொடி ஏற்ற வேண்டும் என்பதே எல்லா நடிகைகளையும் போல தமன்னாவின் விருப்பம்.

அதற்கு ஏற்ப ஹிம்மாத்வாலா படத்தில் தமன்னா நடிக்கிறார். ஹீரோ அஜய் தேவ்கான். தி பியூட்டி என்று தமன்னாவின் படத்தை மட்டும் போட்டு போஸ்டரடித்து விளம்பரம் எல்லாம் அமர்க்களப்படுத்தினார்கள். இந்நிலையில் இன்னொரு சந்தோஷ சேதி தமன்னாவுக்கு கிட்டியிருக்கிறது.

ஹிருத்திக்ரோஷனின் நடனம் பற்றி அனைவருக்கும் தெ‌ரியும். அவ‌ரின் நாடி நரம்பும் நடனமாடும். அவரே தமன்னாவின் நடனத்தை சிலாகித்து சொல்லியிருக்கிறார். என்னுடன் நடித்த பல நடிகைகளைவிட தமன்னாவின் நடனம் சிறப்பாக இருக்கிறது எல்லோராலும் தமன்னா அளவுக்கு ஆட முடியாது என்று அள்ளி வீசியிருக்கிறார் பாராட்டுகளை. ஹிம்மாத்வாலாவுடன் நம்முடைய இந்தி கே‌ரியர் புல்ஸ்டாப் ஆகாது, ஹிருத்திக்ரோஷனின் பாராட்ட அதை கமாவாக்கிவிட்டது என இரட்டிப்பு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தமன்னா.

ச‌ரி, எப்போது தமன்னாவின் ஆட்டத்தைப் பார்த்தாராம் ஹிருத்திக்?

ஃபிலிம்பேர் விருது விழாவில் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடியிருந்தார். அதைப் பார்த்துதான் ஹிருத்தின் இந்தப் பாராட்டுப் பத்திரத்தை வழங்கியிருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.