மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காணாமல் போன காஜல் ! மாற்றான் மர்மம்.

துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்தலாமா கூடாதா என்பதை இன்று தீர்மானிக்கிறது நீதிமன்றம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் தலைப்பு குறித்த வழக்கு கோர்ட்டில் இத்தனை நாள் இருந்ததில்லை. எதிர்மறை என்றாலும் இதுவும் ஒரு சாதனையே.

இந்த அக்கப்போரை தயா‌ரிப்பாளர் பார்த்துக் கொள்ளட்டும் என்று வெளிநாடு கிளம்பிவிட்டார் முருகதாஸ். தனியாக அல்ல டீமுடன். சில பாடல் காட்சிகள் முடிக்க வேண்டியிருக்கிறது, அதற்காகதான் இந்த நெடும்பயணம். தற்போது ஜெனிவாவில் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறாராம். விஜய், காஜல் அகர்வால் இருவரும் இடம்பெறும் டூயட் பாடல்.

இதற்கு முன் சுவிட்சர்லாந்தில் ஒரு பாடல் காட்சி. வழக்கு ஆரம்பித்ததிலிருந்து வெளிநாடுகளில்தான் இந்த டீம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் மாற்றான் விழாவில் காஜல் கலந்து கொள்ளவில்லையாம்.

பொம்மலாட்டத்தில் தொடங்கிய காஜலின் கே‌ரியர் பொம்மலாட்டம் போலவே தடுமாறி இப்போது சூர்யா, விஜய் என்று உச்சத்தை எட்டியிருக்கிறது. கார்த்தியின் ஆல் இன் அழகுராஜாவிலும் இவர்தான் நாயகி என்கிறார்கள்... பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.