> சிவாஜி 3Dயில் ஒன்ஸ்மோர் கேட்ட ரஜினி.
சிவாஜி 3டி-யின் ட்ரெய்லர் நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அழையா விருந்தாளியாக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் வேறு யாருமல்ல... ரஜினி.
ஏவிஎம் சரவணன் உள்பட யாருக்கும் ரஜினி சிவாஜி 3டி-யின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வருவார் என்பது தெரியாதாம். அதைவிட சுவாரஸியம் சிவாஜியை 3டி-யில் உருவாக்கி வருவது போன மாதம்தான் ரஜினிக்கே தெரியுமாம். சுமார் ஒரு வருடமாக இந்த வேலைகள் நடந்து வருகின்றன. திடீரென ஒருநாள் ரஜினியை அழைத்து படத்தின் சில பகுதிகளை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆம்பல் ஆம்பல் பாடலை மட்டும் மூன்றுமுறை ஒன்ஸ்மோர் கேட்டு பார்த்திருக்கிறார் ரஜினி.
விழாவில் எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம் சரவணன், தோட்டா தரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லருடன் ஆம்பல் பாடலையும் ஒளிபரப்பினார்கள். படம் ப்ளாக் பஸ்டர் என்பதை இவை உறுதி செய்தன. அத்தனை நேர்த்தி, அத்தனை சுவாரஸியம்.
எனக்காக பிரார்த்தனை செய்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போகுமோ என்ற வருத்தத்தை இந்தப் படம் போக்கும் என்றார் ரஜினி.
3டி-க்கான வேலைகள் செய்தது பிரசாத் லேப், பணம் போட்டது ஏவிஎம், பணம் தந்து பார்க்கப் போவது பொது ஜனம், லம்பாக இன்னும் பணம் கொட்டப் போகிறது. இதில் ரஜினியின் கைமாறு என்ன இருக்கிறது?
ஆன்மீகவாதிகளே இப்படிதான்... ரொம்ப குழப்புறாய்ங்க.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.