மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் அளித்த துப்பாக்கி சூப்பர் ஹிட் பிரமாண்ட பார்ட்டி

துப்பாக்கி சூப்பர் ஹிட்டானதை பார்ட்டி தந்து கொண்டாடினார் விஜய்.  

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து துப்பாக்கி அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
கேரளாவில் இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் படங்களின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது. அதேபோல் தெலுங்கில். முதலிரண்டு நா‌ட்கள் ஆந்திராவில் சில பிரச்சனைகளை துப்பாக்கி சந்தித்தது. பல இடங்களில் துப்பாக்கிக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது அந்தப் பிரச்சனையும் ஓய்ந்து படம் பிரமாதமான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 

 சமீபத்தில் இப்படியொரு வெற்றி விஜய்க்கு அமையவில்லை. அதற்கேற்ப விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மிகப்பெ‌ரிய பார்ட்டி ஒன்றை அளித்தனர். நண்பர்களுடன் முருகதாஸ் உள்ளிட்ட துப்பாக்கி டீமும் இந்த விருந்தில் கலந்து கொண்டது. 

 விஜய், சங்கீதா அளித்த விருந்து பிரமாதம் என்று முருகதாஸ் தனது ட்விட்ட‌ரில் வியந்திருக்கிறார். 

அடுத்தப் படத்துக்கு விஜய் இதைவிட‌ப் பெ‌ரிய பார்ட்டியாக தரட்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.