தென்கொரியாவைச் சேர்ந்த மாபெரும் மின்னணுவியல் நிறுவனமான சாம்சுங், தனது கேலக்ஸி ரகமான ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய சாம்சுங் கேலக்ஸி கிராண்ட் Samsung Galaxy Grand என்ற போனை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்ஸி கிராண்ட் ஒரு பட்ஜெட் வகை போன் ஆகும். 5 இன்ச் திரை, இரண்டு சிம்கார்டு வசதி (GT-I9082) அல்லது ஒற்றை சிம்கார்டு வசதி (GT-I9080) ஆகிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்த போனின் விலை மற்றும் சந்தையில் வெளியாகும் தேதி ஆகியவை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சாம்சுங் கிராண்ட் போனின் சிறப்பு அம்சங்கள்:
* ஆன்ட்ராய்டு 4.1.2 (Jelly Bean) இதில் இயங்குகிறது.
* 1.2 GHz டியூவல் கோர் பிராசஸர் இதில் இயங்குகிறது.
* பின்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமராவும், முன்பக்கம் 2 மெகாபிக்ஸல் கேமராவும் இயங்குகிறது.
* 5-இன்ச் WVGA TFT LCD (800X480) திரை போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.