காட்டுத்தனமான வெற்றி என கும்கிக்கு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் ஊத்திக் கொண்டதால் பீர்பாலின் சின்ன கோடு பெரிய கோடு தத்துவப்படி கும்கி ஜெயித்துள்ளது.
சிவாஜியின் பேரன் நடித்த படம் என்பதால் அந்தப் பெரிய குடும்பத்துக்கு இது முக்கியமான படம். ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். படத்தின் கதையில் கோட்டைவிட்டாலும் லொகேஷனும், சுகுமாரின் ஒளிப்பதிவும் படத்தை காப்பாற்றியிருக்கிறது. முக்கியமாக கௌதம் படத்தின் தோல்வி.
சென்னையில் முதல் மூன்று தினங்களில் ஒரு கோடிக்கு சற்று குறைவாகதான் இப்படம் வசூலித்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி முதல் மூன்று தினங்களில் இரண்டு கோடிக்கு பக்கத்தில் வசூலித்ததை இங்கு நினைவுகூரவும்.
தமிழகம் முழுவதும் மூன்று தினங்களில் எட்டு கோடிக்கு மேல் கும்கி வசூலித்துள்ளது. இதுவே ஒரு அறிமுக நடிகருக்கு பெரிய வெற்றிதான் என மொத்த டீமும் கூத்தாடுகிறது.
சந்தடிச் சாக்கில் கும்கியின் இயக்குனர் மைனா என்ற பிளாக் பஸ்டர் படத்தை தந்ததை மறந்திட்டீங்களேப்பா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.