ஐபோனில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் ஆப்ஸ், வெளியான இரண்டே நாளில் 10 மில்லியன் முறை தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இதுபற்றிய செய்தியை கூகுள் நிறுவனத்தின் வர்த்தகத்துறை துணைத்தலைவர் ஜெப் ஹப்பர் கூகுள் பிளஸில் வெளியிட்டார்.
அதில் அவர் தெரிவித்ததாவது, ஐபோனுக்குப் பயன்படும் கூகுள் மேப்ஸ் ஆப்ஸ்க்கு உலகம் முழுக்கக் கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது. இந்த வெளியீடுக்காக கடந்த ஏழரை ஆண்டு காலம், கூகுள் மேப்ஸ் டீம் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜெப் ஹப்பர் தெரிவித்தார்.
இந்த கூகிள் மேப்ஸ் ஆப்ஸை ஐபோனில் இன்ஸ்டால் செய்துவிட்டால் உலகின் 500 முக்கிய நகரங்களுக்குள் யார் துணையும் இல்லாமல் உலவலாம். இந்த ஆப்ஸின் மூலம், நாம் பயணிக்கும் சாலையைப் பார்க்கும் வசதி, பயனாளர்களுக்கு திசை காட்டும் வசதி, ஒவ்வொரு திருப்பத்திற்கும் பயணிகளுக்கு திசையைச் சொல்லும் வாய்ஸ் நேவிகேசன் வசதி, கோட்டு வரைபடங்கள், நிலவரைபடங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என அசாத்தியமான வசதிகள் அடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.