மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


கும்கி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

4. துப்பாக்கி ஏழாவது வாரத்தில் துப்பாக்கி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களையும், வார நாட்களில் 2.5 லட்சங்களையும் வசூலித்த துப்பாக்கி இதுவரை சென்னையில் 13.37 கோடிகளை வசூல் செய்துள்ளது. 

3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த படங்களில் ஒன்றான இப்படம் வார நாட்களில் 8.5லட்சங்களையும், வார இறுதியில் 17.8 லட்சங்களையும் வண்லித்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.56 கோடி.

2. நீதானே என் பொன்வசந்தம் வார இறுதியில் 31 லட்சங்களையும், வார நாட்களில் 37.5 லட்சங்களையும் வண்லித்திருக்கும் கௌதம் படம் இதுவரை சென்னையில் 4.4 கோடிகளை வசூல் செய்துள்ளது.

1. கும்கி சரியான படங்கள் வெளியாகாததால் கும்கிக்கு அடித்தது யோகம். வார இறுதியில் 1.15 கோடியும், வார நாட்களில் 1.24 கோடியும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் மட்டும் 6.43 கோடிகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.