மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


சென்னை எக்ஸ்பிரஸ் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையில்.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்திருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தென்னிந்தியா - குறிப்பாக தமிழகத்தின் மீது வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு‌ பெ‌ரிதாக மதிப்பேதும் இருந்ததில்லை. சென்னை என்றால் கறுப்பான ஆண்களும், பெண்களும் நிறைந்த இடம் என்பதுதான் அவர்களின் மனப்பதிவு.

சென்னை எக்ஸ்பிரஸின் ஃபர்ஸ்ட் லுக் இதனை அப்படியே பிரதிபலிக்கிறது. தடித்தடியான ஆண்கள் சட்டையில்லாமல் இருக்க அதன் நடுவே ஷாருக்கும், தீபிகாவும் இருப்பது போல் போஸ்டர் டிஸைன் செய்திருக்கிறார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இவ‌ரின் படங்கள் காமெடிக்கு பெயர் போனவை.

தமிழகத்தில் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் நடப்பதாக கதை அமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தீபிகாவின் அப்பாவாக சத்யராஜும், இன்னொரு வேடத்தில் மனோரமாவும் நடித்துள்ளனர்.

படத்தில் தமிழர்கள் குறித்த சித்த‌ரிப்பு மோசமாக இருக்கலாம் என்ற எண்ணத்தையே இந்த ஃபர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.