4. புத்தகம்
விஜய் ஆதிராஜ் இயக்கியிருக்கும் புத்தகம் ரசிகர்களை தீண்டியதாகவே தெரியவில்லை. ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை 3.5 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் சரியும் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
3. சமர்
சமர் படத்தின் ஓபனிங் நிச்சயமாக மிகக்குறைவுதான். மூன்று நாட்களில் சராசரி நடிகர்களின் படங்களே கோடியை தாண்டும் போது ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை 49.6 லட்சங்களே வசூலித்துள்ளது. விஷால், த்ரிஷா... பண்டிகை தினம்வேறு. இந்த வசூல் வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர்.
2. கண்ணா லட்டு தின்ன ஆசையா
சந்தானத்தின் கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா ஜனவரி 13 முதல் 17 வரை 1.9 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ம்... பாக்யராஜுக்கு கிடைக்க வேண்டிய பணம்.
1. அலெக்ஸ் பாண்டியன்
பொங்கல் படங்களில் தரத்தில் கடைசி இடம் என்றாலும் வசூலில் இதுதான் முதலிடம். ஜனவரி 11 வெளியான இப்படம் 7 நாட்களில் 3.26 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் கூட்டம் வடிந்துவிட்டதால் அடுத்தடுத்த தினங்களில் வசூல் பாதாளத்துக்கு பாய வாய்ப்புள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.