கமல் DTH வெளியீட்டை தள்ளி வைத்ததால் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். படத்தின் தமிழக ஏரியாக்கள் ஏறக்குறைய எல்லாமே விற்றுவிட்டன.
படத்தின் சேலம் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிரச்சனை முடிந்தவேளை கேரளாவில் ஏ சென்டர் திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியுள்ளனர். கமல் விஸ்வரூபம் படத்தை பி மற்றும் சி சென்டர்களில் வெளியிட்டால் நாங்கள் படத்தை புறக்கணிப்போம் என்று நியாயமே இல்லாத டிமாண்ட் ஒன்றை முன் வைத்துள்ளனர். அதேநேரம் கேரள அரசின் திரையரங்குகள் விஸ்வரூபத்தை வெளியிட தயாராக உள்ளன.
இந்தியில் படத்தை எப்போது வெளியிடுவது என்பது முடிவாகவில்லை. அங்கேயும் பிவிபி சினிமா காரணமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஸ்வரூபம் வியாபார தளத்தில் பிரச்சனையிலிருந்து முற்றாக விடுபாடாத நிலையில் படம் குறித்த பாராட்டுகள் நம்பிக்கை தருகின்றன. ஏற்கனவே பாரதிராஜா படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்த்து கமலை பாராட்டியிருக்கிறார். பாலுமகேந்திராவுக்கும் படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் கமல் தனது சினிமா குறித்த மேட்னெஸ்ஸிலிருந்து விலகாதவரை யாரும் அவரை தொட முடியாது, கமல் ஒரு தமிழன், என்னுடைய நண்பர் என்பதில் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். கமலை உலக நாயகன் என்று சொல்வதற்குப் பதில் உலக இயக்குனர் என சொல்லலாம் எனவும் பாலுமகேந்திரா தெரிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.