நாளுக்குநாள் ஜில்லாவின் சந்தை மதிப்பு எகிறுகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ஜில்லாவின் ஓபனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருப்பதாக இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் காட்சியில் விஜய், மோகன்லால் இருவரும் நடித்திருக்கிறார்கள். எஸ்.பி.பி. குரல் மோகன்லாலுக்கு, சங்கர் மகாதேவனின் குரல் விஜய்க்கு.
சரி, வியாபார ஏரியாவுக்கு வருவோம். ஜில்லாவின் கேரளா உரிமையை மோகன்லால் வாங்கியிருக்கிறார். சம்பளத்துக்குப் பதிலாக இந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் கடும் போட்டிக்கு இடையே வாங்கியுள்ளது.
வீரத்தை முந்தவேண்டும் என்ற வேகம் தெரிகிறது ஜில்லா டீமிடம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.