மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> யான் படத்தின் பாடல்கள் டிசம்பர் 15 வெளியீடு.

ஜீவா, துளசி நாயர் நடித்துவரும் யான் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் யான். என் பணி ஒளிப்பதிவு செய்து கிடப்பதே என்று சில வருடங்கள் முன்புவரை உறுதியாக இருந்தவரை ஒளிப்பதிவாளர்களின் இயக்குனர் அவதாரமும், அதற்கான அங்கீகாரமும் அசைத்துவிட்டது.

உள்நாடு வெளிநாடு என விரட்டி புரட்டி படப்பிடிப்பு நடத்தியவர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறார். ஒருபக்கம் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. எல்ரெட் குமா‌ரின் ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் படத்தை தயா‌ரிக்க ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார்.

நாசர், பிரகாஷ்ரா‌ஜ் இருவரும் நடித்துள்ளனர். வரும் 15ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.