இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பது தியரி. ஆனால் பொங்கலுக்கு வெளியான ஜில்லா, வீரம் இரண்டுமே சூப்பர்ஹிட். யார் பெரிய ஸ்டார் என்ற ரசிகர்களின் போட்டியில் இரண்டு படங்களுமே வெற்றி இலக்கை எட்டியதில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சி.
அஜித், விஜய் படங்கள் தனித்தனியாக வெளியானாலே இரண்டு பேரின் அசட்டு ரசிகர்களும் மோதிக் கொள்வார்கள். இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால்...? அந்த களேபரத்தில் காசு பார்த்தவர்கள் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்.
தீபாவளி, பொங்கல் தவிர்த்து ஒரு பண்டிகையை உருவாக்க வேண்டுமானால் விஜய், அஜித் நடித்தப் படங்களை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்தால் போதும். இந்த உண்மையை கண்டு கொண்டவர்கள் விஜய்யிடமும், அஜித்திடமும் அடுத்தப் படத்தையும் ஒரே நாளில் மோத விடுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
சண்டை நடந்தால்தான் இவர்களுக்கு செல்வம் சேரும் போலிருக்கே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.