மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


திட்டமிட்டே விமானத்தை மலையில் மோதினார் துணை விமானி 'திடுக்' தகவல்.

ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை விமானி வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜேர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. 

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி, பிரதான விமானி வெளியே சென்றிருந்தபோது, விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கருப்பு பெட்டியில் பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

World News Videos | US News Videos
பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய ஜேர்மன்விங்ஸ் விமானியும் , அவரது பின்னணியும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.